பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த, கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பா. சிவக்குமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் பேசியது: கூட்டுறவு சங்கத் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆளும் கட்சி தரப்பில் பல்வேறு அச்சுறுத்தல்கள் வருகிறது. இதனால், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் தங்களது பணிகளில் முழுமமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டுமானால், கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தவும், காவல் துறையினரின் பாதுகாப்பு கோரியும் அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் முழக்கமிடப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்துப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், மருதமுத்து, அரப்பளி, ஆர். சிவக்குமார், விஸ்வநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.95.27! 14 காசுகள் உயர்வு!

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள்!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


