முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.   

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.   
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆண்டு விழா, மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் விழா, 80 வயதான ஓய்வூதியர்களை கொரவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
மாவட்டத் தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். தாளாளர் எம். கிறிஸ்டோபர், செயலர் மித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் மருதமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் சுந்தரம், கி. முகுந்தன், சித்த மருத்துவர் கோசிபா, அரியலூர் மாவட்ட செயலர் நல்லதம்பி, செயல் தலைவர் வடமலை ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  
பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.  
கூட்டத்தில், தமிழக அரசால் ஓய்வூதியர்களின் நலனுக்காக 2018- 22 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். சந்தா தொகையை குறைத்து பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான மருத்துவப்படியை மாநில ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்க வேண்டும். 7 ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை 2016 ஜனவரி முதல் வழங்க வேண்டும். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை இரண்டாகப் பிரித்து மகளிர் உயர்நிலைப் பள்ளியாகவும், ஆலத்தூர் வட்டம், கொட்டரையில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தியமைக்கும் தமிழக அரசுக்கும், கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
தலைமை நிலைய செயலர் மணி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.