
செப்.3-இல் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் தொடக்கம்
பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்.3 முதல் 7 ஆம் வரை நடைபெற உள்ளது.
பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்.3 முதல் 7 ஆம் வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வி மற்றும் உடற்கல்வித் துறை சார்பில் குறுவட்டப் போட்டிகள் ஆக.1 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. குழுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள், தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
அதன்படி, செப்.3ஆம் தேதி கால்பந்து, கையுந்துப் பந்து, கோ-கோ, டென்னிஸ், மேஜை பந்தாட்டம், இறகுபந்து ஆகிய போட்டிகள் வயது மற்றும் பிரிவு வாரியாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட உள்ளது. செப்.4ஆம் தேதி வளைகோல் பந்தாட்டம், கூடைப்பந்து, கபடி, கைப்பந்து, பூப்பந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.
செப்.5ஆம் தேதி கடற்கரை கையுந்துப் பந்து, கேரம், வளையப்பந்து, சாலையோர மிதிவண்டி ஆகிய போட்டிகளும், செப்.6,7 தேதிகளில் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. குழுப் போட்டிகளில் முதலிடம் பெறும் அணியும், தடகளப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்களாவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




