பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், ஆதார பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியம் கருதி வணிகர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்.
தடை செய்யப்பட்ட, அதற்கான மாற்றுப் பொருள்கள்: உணவு பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் ஷீட், பிலிம் ஒட்டிய ஷீட்டுக்கு பதிலாக வாழை இலை, பாக்கு மர இலை, அலுமினிய படலம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். சாப்பாட்டு மேஜையில் விரிக்கும் பிளாஸ்டிக் ஷீட்டுக்கு பதில் பேப்பர் ரோல் விரிக்கலாம்.
பிளாஸ்டிக் தெர்மோகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுக்களுக்கு பதில் வாழை இலை, பாக்குமர இலை, தாமரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் கப்புகள், டீ கப்புகள், டம்ளர்கள், தெர்மாகோல் கப்புகள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுக்கள் ஆகியவற்றிற்கு பதிலாக கண்ணாடி, உலோக டம்ளர்களை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக பேப்பர் ஸ்ட்ரா பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பைகளுக்கு பதிலாக துணி, பேப்பர், சணல் பைகளைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதில் பேப்பர், துணி கொடிகளை பயன்படுத்தலாம்.
அனுமதி அளிக்கப்பட்டவை: தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேனர், பிளக்ஸ் போர்டு, பிளாஸ்டிக் ஸ்பூன், மளிகைப் பொருள்கள் அடங்கிய பேக்கிங்குகள், குப்பை பைகள், மக்கக்கூடிய கேரி பேக்குகள், ஒட்டக்கூடிய டேப்புகள், பிளாஸ்டிக் கோணிப் பை, பால், ஜூஸ் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொள்கலன், பிளாஸ்டிக் சாசெட்டுகள், பிளாஸ்டிக் ஸ்டேசனி உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தலாம்.
பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









