பெரம்பலூர் நகரில் பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள், பெயர், படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸார் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரம்பலூர் நகரின் பல பகுதிகள் வாகன நெரிசலால் சிக்கித் திணறுவது வாடிக்கையாக உள்ளது. போதிய போக்குவரத்துக் காவலர்கள் இல்லாததால், சாலை விதிமீறல்கள் சர்வ சாதாரணமாகி விட்டது.
இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் பலர், தங்களது வாகனத்தில் பதிவு எண்ணை எழுதாமலும், அந்த இடத்தில் தங்களது குடும்பப் பெயர், விரும்பிய நடிகர், கடவுள், பணியாற்றும் நிறுவனம், கவிதை என எழுதி வைத்திருக்கின்றனர். சில வாகனங்களில், எண்களுக்குப் பதிலாக போலீஸ், பிரஸ், ஆர்மி, எக்ஸ்- ஆர்மி உள்ளிட்ட வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.
காவல் துறையில் பணியாற்றாத, அந்தத் துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களும் தங்களது வாகனத்தில் போலீஸ் என்று எழுதிக் கொள்கின்றனர். துண்டுப் பிரசுரங்கள், நோட்டீஸ், டிஜிட்டல் பேனர் தயாரிப்போர் கூட பத்திரிகையாளர்களைப் போல பிரஸ் எனும் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அண்மைக்காலமாக கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச் சம்வங்களில் ஈடுபடுவோர் அதிகளவில் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை பயன்படுத்தப்படுவதாகவும், பதிவு எண் எழுதப்படாத வாகனங்கள், விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும்போது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
குற்ற வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களை ஏலம் எடுப்போர், புதிய பதிவு எண்களை வாங்காமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்த வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்போது, அவற்றை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. எனவே, நகரில் வாகனங்கள் பதிவு எண் இல்லாதது, பெயர், படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

