மருத்துவத் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என செவிலியர் சங்க அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட மருத்துவத் தேர்வாணைய செவிலியர்கள் மேம்பாட்டு சங்க அமைப்புக் கூட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இரா. சகுந்தலா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் க. கோபிநாதன், அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் கே. ஆளவந்தான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். கூட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இதர செவிலியர்களுக்கு வழங்கப்படுவதைபோல் மருத்துவ தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து வழங்க வேண்டும். மருத்துவத் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பணி வரன்முறைப்படுத்தப்பட வேண்டும்.
பணியிட மாறுதல் கலந்தாய்வின்படி, உடனடியாக அனைவருக்கும் விடுவிப்பு ஆணை வழங்க வேண்டும். அதிக பணிச் சுமைக்கும், மன உளைச்சலுக்கும் தள்ளப்படுவதை தவிர்க்க, காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் விஷ்ணு, நிர்வாகிகள் ரவி, பன்னீர்செல்வம் உள்பட செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலர் ஆனந்த் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறையில் நியமனம்! நிர்மல் குமார்

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது: நிர்மல் குமார் அறிவிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


