ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பல்திறன் போட்டி:தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி சிறப்பிடம்

வேளாண் கல்லூரிகளுக்குகிடையே மாநில அளவிலான பல்திறன் போட்டிகளில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:47 am

DIN

வேளாண் கல்லூரிகளுக்குகிடையே மாநில அளவிலான பல்திறன் போட்டிகளில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் மாநில அளவில், வேளாண் கல்லூரிகளுக்குகு இடையேயான பல்திறன் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண் 
கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் பங்கேற்ற பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவர் ராமகிருஷ்ணன், மாணவி யுவப்ரியா ஆகியோர் வினாடி- வினா போட்டியிலும், மிஸ்டரி ஹன்ட் போட்டியில் மாணவர்கள் சஞ்சீவ், சிவசங்கரன் ஆகியோரும் முதலிடம் பெற்றனர். 
பேஸ்டர் ப்ரெசெண்டேஷன் போட்டியில் மாணவிகள் லோகநாயகி, யுவபிரியா ஆகியோர் இரண்டாமிடமும், தனிநபர் நடனப் போட்டியில் மாணவர் தினேஷ் இரண்டாமிடமும், தனிநபர் பாட்டுப் போட்டியில் மாணவர் ராமகிருஷ்ணன் மூன்றாமிடமும் பெற்றனர். மேலும், கல்லூரிகள் வாரியான தர வரிசையில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மூன்றாமிடத்தை பெற்றது. 
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், புதன்கிழமை பாராட்டி பரிசு வழங்கினார். கல்லூரி டீன் கீதா உடனிருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.