விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் காயமடைந்த கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.


பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் காயமடைந்த கூலித்தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (45), கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. இவர், கடந்த 24 ஆம் தேதி பெரம்பலூரில் கரும்பு வெட்டும் பணிக்காக வந்ததாகக் கூறப்படுகிறது. அன்று இரவு அவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் உள்ள மெக்கானிக் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவர் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில், கோவிந்தன், மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சமயபுரத்தை சேர்ந்த கதிர்வேல் (23), மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரம்பலூரை சேர்ந்த ஹரிப்பிரியன் (23) ஆகியோர் பலத்த காயமடைந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தன் புதன்கிழமை உயிரிழந்தார். புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...