சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெரம்பலூரில் பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது

பெரம்பலூரில் பள்ளி மாணவரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சக மாணவர்கள் 3 பேர் சனிக்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:28 am

பெரம்பலூரில் பள்ளி மாணவரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சக மாணவர்கள் 3 பேர் சனிக்கிழமை இரவு சிறையில் அடைக்கப்பட்டனர்.
துறைமங்கலம் அவ்வையார் தெரு, சமத்துவபுரம், வெங்கடேசபுரம் காலனி, அன்புநகர், கே.கே.நகரைச் சேர்ந்த 5 மாணவர்கள் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். 
சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் 4 பேர் சேர்ந்து மற்றொரு மாணவரை மிரட்டி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்களாம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீஸார், மாணவர்கள் மூவரைக் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மற்றொரு மாணவர் தேடப்பட்டு வருகிறார்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.