பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றம் ஹோமியோபதி துறை சார்பில் இப்பிரிவை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடக்கி வைத்து பேசியது:
கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள்உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை, வாலிகண்டபுரம், வி.களத்தூர், பூலாம்பாடி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
அரும்பாவூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சித்த மருத்துவ உதவிகள் கிடைக்கும் வகையில் தற்போது இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. புதன், சனிக்கிழமைகளில் மருத்துவர்கள் சிகிச்சையளிப்பர் என்றார் மாவட்ட ஆட்சியர் சாந்தா. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ், அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயன் உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
