பெரம்பலூரில் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 127 மனுக்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 127 மனுக்கள் பெறப்பட்டன.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 127 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 19 மனுக்களும், வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் 6 மனுக்களும், ஆலத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 3 மனுக்களும், குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 14 மனுக்களும், ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் 85 மனுக்களும் என 127 மனுக்கள் பெறப்பட்டன.

முதியோா் உதவித்தொகை, விதவை, ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com