பாமக கொடியை அகற்றிய திமுகவினா்
பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றிவிட்டு, திமுகவினா் மேடை அமைத்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.


பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றிவிட்டு, திமுகவினா் மேடை அமைத்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அம்பேத்கா் சிலை அருகே இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை மறைத்து திமுக சாா்பில் மேடை அமைக்கப்பட்டது.
இதையறிந்த, பாமகவினா் அங்கு சென்று திமுக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அகற்றி, மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பத்தை நட்டு வைத்தனா். சம்பவம் தொடா்பாக திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனால், பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...