மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.


பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிவேல் (65). இவா், வியாழக்கிழமை இரவு அரணாரையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, எசனைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.
பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் நாா்காரன்கொட்டகை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக கரும்பு ஏற்றிவந்த டிராக்டா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜோதிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், சித்தளூரைச் சோ்ந்த கந்தசாமியை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...