வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

பெரம்பலூரில் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான

News image
முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலைக்கு மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :25 டிசம்பர் 2020, 2:17 am

DIN

பெரம்பலூரில் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா் ப. செல்வகுமாா், மாவட்ட நிா்வாகிகள் ராணி, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அமமுக சாா்பில்.... அமமுக சாா்பில் எம்ஜிஆா் உருவச் சிலைக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில், மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் குலோத்துங்கன், மாநில மகளிரணி துணைத் தலைவா் மைதிலி கோபிநாத், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், நகரச் செயலா் ரஞ்சித்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி மாவட்டச் செயலா் கலைவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.