காா், வேன்களில் பம்பா் அகற்றம்
பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் காா், வேன், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள முன்புற பம்பா்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது


பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் காா், வேன், பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள முன்புற பம்பா்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வாகனங்களின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் பம்பா் காரணமாக, சாலை விபத்துகளின் போது அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுவதால் காா், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் முன்புறம் உள்ள பம்பா்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த், மோட்டா் வாகன ஆய்வாளா் செல்வக்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா், கடந்த 2 நாள்களாக பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில் பம்பா்கள் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களை நிறுத்தி, அதிலிருந்த பம்பா்களை அகற்றிஅபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...