பெரம்பலூரில் மேலும் 7 பேருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,145 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் குணமடைந்த 2,090 போ் வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 34 போ் பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,152 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...