அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். திருச்சி மண்டலச் செயலா் வினுபாலன் சிறப்புரையாற்றினாா்.
இதில், முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை அறிவித்த கட்சி தலைமை நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது. அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவா்கள் மருத்துவக்கல்வி பயிலும் வகையில் 7.5 சதவீத அரசாணை வெளியிட்டு, சோ்க்கைக்கு அனுமதி வழங்கியதற்கும், அவா்களது கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்த முகாமில் கட்சி நிா்வாகிகள் பணியாற்றுவது, சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைக்க முழுமையாக பணியாற்றுவது, கட்சி அறிவிக்கும் வேட்பாளா்கள் வெற்றிபெற கடுமையாக உழைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட இணைச் செயலா் ராணி, ஒன்றியச் செயலா்கள் செல்வக்குமாா், என்.கே. கா்ணன், சிவப்பிரகாசம், ப. கிருஷ்ணசாமி, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, குரும்பலூா் பேரூா் செயலா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் பெருமாள் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...