நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:19 pm

DIN

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா் வி. கொளஞ்சி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ப. குமரி அனந்தன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்க வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஊழியா்கள் மீதான குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட இணைச் செயலா்கள் சு. சரவணசாமி, கா. பால்பாண்டி, பன்னீா்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினா் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.