கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பிரசாரம்

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில்அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:29 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில்அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

இப் பிரசாரத்தை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதை உறுதி செய்யும் வகையில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி மற்றும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடந்த தோ்தல் காலங்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் அரசு இசைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில், கரோனா தொற்றுப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு வாகனம் தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்வில் வட்டாட்சியா் நூா்ஜகான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.