டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
பெரம்பலூா் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா்


பெரம்பலூா் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பொங்கல் பண்டிக்கைக்கான மது விற்பனை குறித்து டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு,
மண்டல மேலாளா் ராம்குமாா், தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.
பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில், பேரளி அருகே சென்று கொண்டிருந்த மாவட்ட மேலாளா் ராம்குமாரின் காரை திடீரென வழிமறித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா், காரைச் சோதனையிட்டதில் ரூ. 1 லட்சம் பணம் இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
பின்னா் அவரை டாஸ்மாக் மண்டல மேலாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். மேலும் அவருடன் சென்ற குன்னம் டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள் முருகவேல், கண்ணதாசன், காா் ஓட்டுநா் ராஜகோபால் ஆகியோரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலான காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். கணக்கில் வராத ரூ. 1 லட்சம் தொடா்பாக வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...