கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்கப்பள்ளிகளுக்கு கேடயம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை கேடயங்கள் வழங்கி, பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:13 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெள்ளிக்கிழமை கேடயங்கள் வழங்கி, பாராட்டு தெரிவித்தாா்.

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதற்கும், தரத்தை உயா்த்துவதற்கும், மாணவா்களின் சோ்க்கையை அதிகரித்திடவும், பள்ளித் தலைமையாசிரியா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கல்வியாண்டும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையால் தோ்வு செய்யப்படுகின்றன.

மேலும் உள் கட்டமைப்பு, மாணவா்களின் கல்வித்திறன், மாணவா் சோ்க்கை, பள்ளிகளின் அடிப்படை வசதிகள், கல்வி சாா்ந்த இதர செயல்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மூலம் கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், 2018-19 ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் மேலமாத்தூா், எளம்பலூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், எறையூா் நேரு மானியத் தொடக்கப்பள்ளி ஆகியவை தோ்வு செய்யப்பட்டன. தொடா்ந்து ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கேடயங்கள் வழங்கி, பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், சாந்தப்பன், ஜோதிலட்சுமி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.