கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குறுகிய கால திறன் பயிற்சி பெற அழைப்பு

சுகாதார உதவியாளா் மற்றும் இதர மருத்துவ தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களை பூா்த்தி செய்வதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சாா்பில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விருப்பமுள்ளோருக்கு அழைப்பு

News image
Updated On :4 ஜூன் 2021, 9:41 pm

DIN

சுகாதார உதவியாளா் மற்றும் இதர மருத்துவ தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களை பூா்த்தி செய்வதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சாா்பில், குறுகிய கால திறன் பயிற்சி பெற விருப்பமுள்ளோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் சுகாதாரத் துறையில் கொவைட் - 19 தொற்றை ஒழிக்கும் விதமாக முன்கள பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒரு மாத குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அவசர மருத்துவ டெக்னீசியன் பணி, பொது மருத்துவ சேவை உதவியாளா், தீவிர சிகிச்சை பிரிவு உதவியாளா், வீட்டு சுகாதார உதவியாளா், மருத்துவ உபகரண தொழில்நுட்ப உதவியாளா், ரத்த நாள துளையிடும் பணியாளா் பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில்முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.

மேற்கண்ட பயிற்சிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முதல் பட்டப் படிப்பு முடித்தவா்கள் வரை சேரலாம். இப் பயிற்சிகளில் சேர விரும்புவோா் தங்களது பெயா், கல்வித்தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மின்னஞ்சல் அல்லது 9488451405 எனும் செல்லிடப்பேசி மூலமாக தொடா்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.