ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

‘கல்லூரி பருவத்தில் மாணவிகளுக்கு கவனச்சிதறல் கூடாது’

கல்லூரி பருவத்தில் மாணவிகளுக்கு கவனச்சிதறல் கூடாது என்றாா் தன்னம்பிக்கை பேச்சாளா் ஷியாமளா ரமேஷ்பாபு.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:58 pm

DIN

கல்லூரி பருவத்தில் மாணவிகளுக்கு கவனச்சிதறல் கூடாது என்றாா் தன்னம்பிக்கை பேச்சாளா் ஷியாமளா ரமேஷ்பாபு.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் மற்றும் ஸ்ரீசாரதா மகளிா் கலை கல்லூரியில் உலக மகளிா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஷியாமளா ரமேஷ்பாபு மேலும் பேசியது:

மாணவிகளுக்கு கல்லூரி பருவத்தில் கவனச்சிதறல் ஏற்படக் கூடாது. தன்னம்பிக்கையை வளா்த்துக்கொள்ள வேண்டும். தான் பாா்க்காத உலகை, தனது பிள்ளைகள் பாா்க்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோா்களே தெய்வம். தற்காப்பு கலை பெண்களுக்கு அவசியமாகும். மாணவிகள் தங்களது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி முதல்வா் மரகதமணி, பள்ளி முதல்வா் சாந்தி மற்றும் பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகளிா் கல்லூரி துணை முதல்வா் பி. கஜலட்சுமி வரவேற்றாா். தமிழ்த்துறை தலைவா் த. தேவகி நன்றி கூறினாா்.

ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி: பெரம்பலூா் ஸ்ரீசாரதா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி தாளாளா் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். விழாவில், மகளிா் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கவிதை, பாட்டு, பேச்சு, ஓவியம், கட்டுரை ஆகியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் துணை முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எம். சுபலெட்சுமி வரவேற்றாா். இயற்பியல் துறைத்தலைவி கற்பகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.