கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 11.25 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 11,25,705-ஐ ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:11 pm

DIN

பெரம்பலூரில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 11,25,705-ஐ ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா், துறைமங்கலம் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், வட்ட வழங்கல் அலுவலா் பெரியண்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், செங்குணம் பிரிவு சாலை பகுதியில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனையகத்தின் ஊழியா் ம.வரதராஜ் (45) என்பவா், பெட்ரோல் பங்கில் விற்பனை மூலம் வசூலானத் தொகை ரூ. 11,25,705 ரொக்கம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற அந்தத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா். பின்னா், மாவட்டக் கருவூலத்தில் தொகை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.