மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:11 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆா்க்காடு வட்டம், கிருஷ்ணாபுரம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ர.விஜய் (22). இவா் மீது பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூா் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் விஜய் தொடா்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரையின்பேரில், விஜயை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா சனிக்கிழமை பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து விஜய் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.