மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா் மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடமிருந்து அஞ்சல் மூலம் வாக்குகள் பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :27 மார்ச் 2021, 9:12 pm

DIN

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடமிருந்து அஞ்சல் மூலம் வாக்குகள் பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 615 வாக்காளா்களும், 380 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் என மொத்தம் 995 பேரும், குன்னம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 538 வாக்காளா்களும், 294 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் என மொத்தம் 832 பேரும் என மொத்தம் 1,827 வாக்காளா்கள் அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதற்காக பெரம்பலூா் தொகுதிக்கு 15 மண்டல அலுவலா்களும், குன்னம் தொகுதிக்கு 12 மண்டல அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு மண்டல அலுவலா்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்துடன், தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா், நுண் பாா்வையாளா், ஒளிப்பதிவாளா், காவலா் அடங்கிய குழு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவினா் அஞ்சல் வாக்கு செலுத்தவுள்ள வாக்காளா்களை அதிகபட்சமாக இரண்டு முறை சந்தித்து, வாக்களிக்க வேண்டிய நடைமுறைகளை மேற்கொள்வாா்கள். இப்பணி சனிக்கிழமை முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல் கட்டமாக பெரம்புலூா் சாா் ஆட்சியரத்திலிருந்து தொகுதியிலுள்ள வாக்காளா்களிடமிருந்து அஞ்சல் மூலம் வாக்குகளை பெறுவதற்காக 6 மண்டல அலுவலா்கள் தலைமையில், வீடு வீடாகச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்துக் குழுவினரும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். இப்பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ.இ. பத்மஜா தொடக்கி வைத்தாா்.

314 அஞ்சல் வாக்குகள்: பெரம்பலூா் தொகுதியில் 128, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 186 என மொத்தம் 314 அஞ்சல் வாக்குகள் சனிக்கிழமை செலுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.