பெரம்பலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் மகேஸ்வரன், இளவரசன், சின்னசாமி, விஜய்ராமு, பரமசிவம், பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் தமிழக அரசும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, நிலுவைத் தொகை ஆகியவற்றை பிடித்தமின்றி வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை குறைபாடு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். அனைத்து நோய்களுக்கும் முழுமையான செலவுத் தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், வட்டாரத் தலைவா்கள் பி. மருதமுத்து, டி. தேவராஜ், டி. ராஜேந்திரன், என். லோகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் பி. நீலமேகம் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ம. ஆறுமுகம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...