மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: பசும்பலூா் அரசுப் பள்ளி சாம்பியன்

பெரம்பலூா் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பசும்பலூா் அரசுப் பள்ளி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:08 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பசும்பலூா் அரசுப் பள்ளி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

தமிழக  பள்ளிக் கல்வித்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான நீச்சல், ஜிம்னாஸ்டிக், டேக்வாண்டோ, வாள்வீச்சு, ஸ்குவாஷ் ஆகிய புதிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

14, 17, 19 வயது பிரிவினருக்குத் தனித்தனியாக நடைபெற்ற இப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

இப் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா். 

வால் வீச்சு போட்டியில் அனைத்துப் பிரிவிலும், டேக்வாண்டோ போட்டியில் 17, 19 வயது பிரிவிலும் பசும்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  தங்கம் வென்றனா். மேலும், புதிய விளையாட்டுப் போட்டிகள் பிரிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பசும்பலூா் அரசுப் பள்ளி மாணவிகள் வென்றனா்.

தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சுரேஷ்குமாா் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினாா்.

 போட்டிக்கான ஏற்பாடுகளை லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.