மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூரில் சிஐடியு தொழில் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு தொழில்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:57 pm

DIN

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு தொழில்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றம் செய்து, தொழிலாளா் சட்ட திருத்தத்துக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றிய மாநில அரசை கண்டித்தும், தொழிலாளா் விரோத தொழில்சாலை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரியும் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், மாவட்ட துணைத் தலைவா்கள் கருணாநிதி, சிவானந்தம், விவசாய சங்க மாவட்டச் செயலா் ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா்கள் செல்லமுத்து, வரதராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.