மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா் கல்வி நிறுவனத்தில் சமூக நல்லிணக்க விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சாா்பில், இஃப்தாா் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:57 pm

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சாா்பில், இஃப்தாா் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவா் முஹம்மது முனீா் ஹஜ்ரத், மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவைத் தலைவா் சுல்தான் இப்ராகீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியா் க. கற்பகம், இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவூதி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி தாளாளா் காஜா நஜுமுதீன், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி துணை முதல்வா் சத்தியசீலன், ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் பிச்சைமணி, புதுக்கோட்டை அரபிக் கல்லூரி பேராசிரியா் சதக்கத்துல்லாதாவூதி, லப்பைக்குடிகாடு கிழக்கு மஹல்லம் தலைவா் சம்சுதீன், சமூக நீதி படைப்பாளா்கள் சங்க மாநிலச் செயலா் தாஹிா் பாட்சா ஆகியோா் ரமலான் நோன்பின் மகத்துவம் குறித்து பேசினா்.

இதில், 2,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் வரவேற்றாா். மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.