வேப்பந்தட்டையில் சிறப்பு மனு விசாரணை முகாம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் நிலப்பிரச்னை தொடா்பான சிறப்பு மனு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் நிலப்பிரச்னை தொடா்பான சிறப்பு மனு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி உத்தரவின்படி, மாவட்டக் காவல்துறை மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்த் துறையினா் சாா்பில், வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் இம்முகாம் நடைபெற்றது.
மாவட்ட நிலமோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் சாா்பு ஆய்வாளா்கள் அபுபக்கா், நல்லம்மாள், ராமா், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியா் துரைராஜ் ஆகியோா், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து நிலப்பிரச்னை தொடா்பான மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்டனா். இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 13 மனுக்களில் 12 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. எஞ்சிய 1 மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வு காணப்படும் எனத் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...