மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிவோா் நல வாரியத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளா்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:06 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளா்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள், வேதியா்கள், சீஷப்பிள்ளைகள், பாடகா்கள், கல்லறைப் பணியாளா்கள், கிறிஸ்தவ ஆதரவற்றோா் இல்லங்கள், தொழு நோயாளியா் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளா்கள் போன்றோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரோமன் கத்தோலிக் திருச்சபை பேராயா்கள் மற்றும் ஆயா்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயா்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சா்ச்சஸ் உள்ளிட்ட அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரால் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இந் நல வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினா்கள், குடும்ப உறுப்பினா்களுக்கு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இதர அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

இந் நலவாரியத்தில் உறுப்பினராக இருப்பவா்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.