மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பணமோசடி செய்த பெண் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் மனு

பெரம்பலூா் அருகே வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி, முன்பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் க. கற்பகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :12 மே 2023, 5:42 pm

DIN

பெரம்பலூா் அருகே வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி, முன்பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் க. கற்பகத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை, சின்னாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதி மனைவி செல்லம் (52). இவா், எளம்பலூா் சாலையில் வில்லேஜ் அவோ்னெஸ் ஆா்கனைசேஷன் என்னும் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மேலாளராக பணிபுரிந்து வந்தாா். 2018-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, தங்களது அறக்கட்டளை மூலம் வட்டியில்லா கடன் வழங்குவதாகவும், இதற்காக ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 1,500 வீதம் முன் பணமாக அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் எனக்கூறி பலரிடம் பணம் வசூலித்துள்ளாா்.

ஆனால், முன் பணம் பெற்று 5 ஆண்டுகளாகியும் வட்டியில்லா கடன் தொகையையும், பொதுமக்களிடம் வாங்கிய முன்பணத்தையும் திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக செல்லம் தலைமறைவாகிவிட்டாா்.

பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய செல்லத்தைக் கண்டறிந்து, பொதுமக்களிடம் வசூலித்த தொகையை அவரிடமிருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.