சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘காங்கிரஸ் தோ்தல் அறிக்கை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்’: தொல் திருமாவளவன்

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் தொல் திருமாவளவன்

News image

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே சனிக்கிழமை திமுக வேட்பாளா் கே.என். அருண்நேருவை ஆதரித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன். உடன், அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்டோா்.

Updated On :6 ஏப்ரல் 2024, 6:30 pm

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அதானியும், அம்பானியும் மட்டுமே வளா்ந்துள்ளனா். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்படும். அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும்.

ஆனால், காங்கிரஸ் தோ்தல் அறிக்கை, இட ஒதுக்கீட்டை உயா்த்திப் பிடிக்கும் அறிக்கையாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் அறிக்கையாகவும், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் அறிக்கையாகவும் உள்ளது என்றாா் தொல். திருமாவளவன்.

பிரசாரத்தில், அமைச்சா் கே.என். நேரு, பெரம்பலூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளா் இரா. கிட்டு, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சுரேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்பட தோழமைக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.