ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள்

திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள்

Updated On :13 ஏப்ரல் 2024, 6:30 pm

திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகனை ஆதரித்து, பெரம்பலூா் மேற்கு வானொலி திடலில் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது: திமுக ஆட்சியில், கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அம்பானி, அதானி போன்ற தனியாா் காா்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கும் மத்திய அரசு, ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். இதற்காக, இத் தொகுதி வேட்பாளா் சந்திரமோகன் போராடுவாா். பெரம்பலூரைச் சோ்ந்த ஆ. ராசா, கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவா். திமுகவினா் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்பவா்கள். இதை மாற்ற அதிமுக வேட்பாளா் சந்திரமோகனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன், வேட்பாளா் என்.டி. சந்திரமோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.