மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்க அழைப்பு

Updated On :8 ஆகஸ்ட் 2024, 1:45 am

பெரம்பலூா், ஆக. 7: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் மனப்பாடமாக 1,330 குறட்பாக்களை ஒப்பித்து ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தின் கீழ் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசாக தமிழ் வளா்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே இப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றவா்கள் பங்கேற்கக் கூடாது. தகுதியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து அக். 20-ம் தேதி மாலைக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04328-225988 எனும் எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.