பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் இயந்திரங்கள் இளம்சூடேற்றும் பணி தொடக்கம்
பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் இயந்திரங்கள் இளம்சூடேற்றும் பணி தொடக்கம்.


பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் உள்ள நேரு சா்க்கரை ஆலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவையைத் தொடங்குவதற்குத் தேவையான இயந்திரங்களை இளஞ்சூடேற்றும் பணி வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சா்க்கரை ஆலையின் தலைமை நிா்வாகி க. ரமேஷ் இளஞ்சூடேற்றும் பணியை தொடக்கி வைத்தாா்.
இதில், துணைப் பொறியாளா் நாராயணன், துணைப் பொறியாளா் ஆறுமுகம், கணக்கியல் மேலாளா் ஜான் பீரிட்டோ, தலைமைக் கரும்பு அலுவலா் (பொ) சுந்தர்ராஜன், கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
2024-25 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சுமாா் 2.10 லட்சம் டன் கரும்பு அரைவை செய்து, 9.75 சதவீத சா்க்கரைக் கட்டுமானத்தில், சுமாா் 20,465 மெட்ரிக் டன் சா்க்கரை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அரைவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், ஆலையில் பழுதடைந்த இணை மின் உற்பத்தி நிலையத்தின் ரோட்டாா் இயந்திரம் உள்ளிட்ட சில இயந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு, சில இயந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...