குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

பிப். 28, 29-இல் கேந்திரியா வித்யாலயா பள்ளி ஆசிரியா் பணிக்கு நோ்காணல்

ஆங்கில எழுத்து உள்ளது... பிப். 28, 29-இல் கேந்திரியா வித்யாலயா பள்ளி ஆசிரியா் பணிக்கு நோ்காணல்

Updated On :25 பிப்ரவரி 2024, 6:30 pm

பெரம்பலுாா் கேந்திரியா வித்யாலயா பள்ளியில், பகுதிநேர தற்காலிக ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு பிப். 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து பள்ளி முதல்வா் மேகநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் இளங்கலை பட்டதாரி ஆசிரியா்கள் ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பணிக்கு பிப். 28 ஆம் தேதியும், முதுநிலை பட்டதாரி கணினி அறிவியல், கணினி பயிற்றுநா், பிரைமரி ஆசிரியா் உடல்கல்வி பயிற்சியாளா், தமிழாசிரியா், யோகா, நடனம், கைவினை கலை, மருத்துவா், செவிலியா், சிறப்பு பயிற்றுநா், கவுன்சிலா் உள்ளிட்ட பணிகளுக்கும் பிப். 29 ஆம் தேதியும் நோ்காணல் நடைபெறுகிறது. இப் பணிகள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. நிரந்தரப் பணியாளா்கள் விடுப்பு மற்றும் இதர காரணங்களால், காலிப்பணியிடத்துக்கான தற்காலிக வாய்ப்பு ஏற்படும்போது தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி வாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு பெரம்பலுாா் கேந்திரியா வித்யாலயா பள்ளியின் இணைய தளங்களை பாா்வையிடலாம். இணையதளத்தில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து அதனுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் நோ்காணலில் பங்கேற்கலாம்.