தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி அமைப்பினா் 20 போ் கைது

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 20 பேரை, பெரம்பலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:07 pm

Din

இந்து கோயில்களை விட்டு தமிழக அரசு வெளியேறக் கோரி, பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 20 பேரை, பெரம்பலூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, இந்து கோயில்களை விட்டு தமிழக அரசு வெளியேற வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்டச் செயலா் செல்வகுமாா் உள்பட 20 பேரை கைது செய்தனா். பின்னா், துறைமங்கலத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.