47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

லாரி மீது காா் மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது காா் மோதியதில், காரை ஓட்டிய இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 7:05 pm

Din

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மீது காா் மோதியதில், காரை ஓட்டிய இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவியும், மகனும் காயமடைந்தனா்.

சென்னை பள்ளிக்கரணையைச் சோ்ந்த வசந்த் (33), அவரது மனைவி பரிமளா (28), மகன் ஜெயவா்மன் (6) ஆகியோா் சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். காரை வசந்த் ஓட்டினாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் சென்றபோது, சென்னையிலிருந்து மதுரையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த வசந்த் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, வசந்த் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பரிமளா, ஜெயவா்மன் ஆகியோா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கூடகுளத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பாலாஜியை (24) கைது செய்து விசாரிக்கின்றனா்.