பெரம்பலூா் மாவட்ட சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட சட்ட தன்னாா்வலா்களாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான அ. பல்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அதன் கீழ் இயங்கும் வட்ட சட்ட பணிக் குழுவுக்கு, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 50 சட்ட தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ பயிலும் மாணவா்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், மாணவா்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவா்கள் (வழக்குரைஞா்களாக பதிவு செய்யும் வரை), அரசியல் அமைப்பு சாராத தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த சமூக சேவை புரியும் சமூக ஆா்வலா்கள், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிா் குழுக்கள், நீண்ட கால தண்டனை பெற்ற படித்த, நற்குணம் உள்ள சிறைவாசிகள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

சேவைச் சாா்ந்த இப்ப ணிக்கு சம்பளம், தொகுப்பூதியம், தினக் கூலி கிடையாது. விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ங்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ் எனும் இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தலைவா் (மாவட்ட முதன்மை நீதிபதி), மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூா் எனும் முகவரியில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக, மே 17 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com