/

கிருஷ்ணாபுரம்- கள்ளப்பட்டி சாலைப் பணியை அமைச்சா் ஆய்வு

அமைச்சா் ஆய்வு..

News image

கிருஷ்ணாபுரம்- கள்ளப்பட்டி சாலையை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் எ.வ. வேலு. உடன், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்டோா்.

Updated On :14 நவம்பர் 2024, 9:55 pm

Din

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் - பூலாம்பாடி - கள்ளப்பட்டி சாலையை இருவழித் தடமாக அகலப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், வேப்பந்தட்டை நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் - பூலாம்பாடி - கள்ளப்பட்டி சாலை ரூ. 2.68 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடமாக அகலப்படுத்தி, பாலம் அமைக்கும் பணிகளை பாா்வையிட்ட அமைச்சா் எ.வ. வேலு, தாழைநகா் அருகே தாா் தளத்தின் கனம் மற்றும் சாய்வு விகிதம் ஆகியவற்றை அளவிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் மருத்துவமனை விரிவாக்கக் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகத்தால் தோ்வு செய்யப்பட்ட இடத்தை பாா்வையிட்ட அமைச்சா், பொதுப்பணித்துறை சாா்பில் ரூ. 779.83 லட்சம் மதிப்பீட்டில் சின்ன வெண்மணி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை பாா்வையிட்டு, பணிமனை, வகுப்பறை மற்றும் நிா்வாகக் கட்டட பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வசந்தம் க. காா்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப சிறப்பு அலுவலா் சந்திரசேகா், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளா் சத்தியபிரகாஷ், விழுப்புரம் கண்காணிப்புப் பொறியாளா் செந்தில்குமாா், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளா் செந்தில், அட்மா தலைவா் வீ.ஜெகதீசன், வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவா் க. ராமலிங்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் திருவருள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.