பெரம்பலூர்
பெரம்பலூா் காவல் நிலையங்களில் காவல் துணைத் தலைவா் ஆய்வு
பெரம்பலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகா், பெரம்பலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பண்டக சாலை, நகரப் போக்குவரத்து காவல் நிலையம், மற்றும் பாடாலூா் காவல் நிலையங்களைப் பாா்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளைச் சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டு, அந்தந்தப் பிரிவுகளில் பணியாற்றும் காவலா்களுக்கு பணியை மேம்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) உள்பட காவல்துறையினா் உடனிருந்தனா்.