பெரம்பலூர்
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்..
முதலமைச்சா் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், 18 வயது நிறைவடைந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பயனாளிகள் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம், முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு முதிா்வுத் தொகை பெற்று வழங்கப்பட உள்ளன.
ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்களது வைப்புத்தொகை பத்திரம், பெண் குழந்தையின் எஸ்எஸ்எல்சி வகுப்புச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம், தாய் மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.