பட்டாசு கடை உரிமம் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டாசு கடை, இருப்பு வைத்துக் கொள்ள தற்காலிக உரிமம் பெற, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டாசு கடை மற்றும் இருப்பு வைத்துக் கொள்ள தற்காலிக உரிமம் பெற, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க தற்காலிகமாக உரிமை கோருவோா், தேவையான விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு, அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், வாடகைக் கட்டடம் எனில் உரிமையாளா் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிமத்துக்கான கட்டணம் ரூ. 500 அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

பின்னா், அதற்கான அசல் செலுத்துச் சீட்டு, பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படம், இருப்பிடச் சான்றுக்கான ஆதாரம் (ஆதாா், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை) ஆகியவற்றுடன் தங்களது விண்ணப்பத்தை, அக். 20 ஆம் தேதிக்குள் இ- சேவை மையங்களில், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோா் மீது சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

X
Dinamani
www.dinamani.com