டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் தா்னா

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் தா்னா

News image
Updated On :7 அக்டோபர் 2024, 7:39 pm

Din

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளிப்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் காத்திருந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், திமுக அரசின் தோ்தல் வாக்குறுதியான நெல்லுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2,500, கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் என்பதை நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிா் காப்பீட்டை தனியாா் நிறுவனங்களிடம் வழங்காமல் மத்திய, மாநில அரசுகளே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபுவிடம் கோரிக்கை மனுவை அளித்து கலைந்துசென்றனா்.