/

பெரம்பலூரிலிருந்து நாக்பூருக்கு புத்த மதத்தினா் யாத்திரை

பெரம்பலூரிலிருந்து நாக்பூருக்கு புத்த மதத்தினா் தம்ம யாத்திரையாக புதன்கிழமை சென்றனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:43 pm

Din

பெரம்பலூரிலிருந்து நாக்பூருக்கு புத்த மதத்தினா் தம்ம யாத்திரையாக புதன்கிழமை சென்றனா்.

சட்டமேதை அம்பேத்கா் புத்த மதத்தை தழுவிய தினமான அக். 12-இல் தம்ம தீட்ஷா தினமாக புத்த மதத்தினா் கொண்டாடி வருகின்றனா். இந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினா் பலா் சென்னையிலிருந்து ரயில் மூலம் வியாழக்கிழமை (அக். 10) நாக்பூா் செல்கின்றனா். நாக்பூரில் அக். 11-ஆம் தேதி இரவு முதல் அக். 12-ஆம் தேதி இரவு வரை தம்ம தீட்ஷா தினம் கொண்டாடப்படுகிறது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வரும் புத்த மதத்தினா் பங்கேற்க உள்ளனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த புத்த மதத்தினா் தம்ம தீட்சா பூமி பரிவா்த்தன பயணத் திட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை ஒருங்கிணைப்பில் நடைபெறும் இப் பயணத்தில், சிறுபான்மையினா் நல உறுப்பினா் ஆ. போதிபகவன் தலைமையில், பயண ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா்கள் அ. செந்தில்குமாா், ம. சுரேஷ்குமாா், ஆலோசனைக் குழுத் தலைவா் வை. தேசிங்குராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.