கூடுதல் மகசூல் பெற மண்புழு உரம் இடுவது அவசியம்
கூடுதல் மகசூல் பெற பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் மண்புழு உரம் இடுவது அவசியம் என வேளாண் அறிவியல் மையம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதல் மகசூல் பெற பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் மண்புழு உரம் இடுவது அவசியம் என வேளாண் அறிவியல் மையம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் மு. புனிதவதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி மக்காச்சோளம், ஆமணக்கு, சிறு தானியங்கள் போன்ற விதைகளை விவசாயிகள் விதைத்து வருகின்றனா். பண்டைய காலத்தில் விவசாயமானது, இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தியடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இன்றையச் சூழலில் விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்ததோடு, மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிா்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
இத்தகைய தரம் குறைந்த, வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, மண்புழு உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிா், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு, சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரமாகும்.
விவசாயிகள் தங்களின் வயலில் மண்புழு உரம் ஏக்கருக்கு 2 டன் இடுவதால் வயலில் நுண்ணுயிா் பெருக்கம் அதிகரிக்கும். மண்ணின் நீா்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதி, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது. இதர மட்கும் உரங்களை விட, மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வோ்களின் வளா்ச்சியை அதிகரித்து, செழிப்பான பயிா் வளா்ச்சி, அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. எனவே, மண்புழு உரம் தேவைப்படுவோா் வாலிகண்டபுரதில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தை அணுகலாம். 30 கிலோ ரூ. 240-க்கு கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு 8838255728 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...