அக். 22-இல் துணை முதல்வா் பெரம்பலூா் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனை
பெரம்பலூரில் அக். 22 ஆம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன்.









