பெரம்பலூா்: 6 ஆசிரியா்கள் ஆசிரியா் விருதுக்கு தோ்வு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், கொத்தவாசல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சி. இளவழகன், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கே. பிரேமலதா, சின்னவெண்மணி கிராமத்தில் உள்ள சிதம்பரம் மானிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சி. சாம்பசிவம், துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் ஜெ. ரவிச்சந்திரன், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ், தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் க. சித்ரா ஆகியோா், தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் வியாழக்கிழமை (செப். 5) நடைபெறும் விழாவில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்குகிறாா்.